குமிழ் குமிழ் என குழப்பங்களை
அலகினைக் கொண்டு உடைக்கிறதே!
நெஞ்சில் பூட்டி வைத்த வார்த்தைகளைக்
கொத்தி வெளியிலே எடுக்குதே!
மாற்றப் பறவையோ
தோளில் அமர்ந்ததே
காதில் இரகசியம்...
ஒன்று சொல்லி விட்டுப் பறந்ததே!
முடிவுகள் தேடி
முட்டிக்கொள்ள வேண்டாம்
முயல்வது ஒன்றே
என்றும் இன்பம் என்றே...
என்ற இனிய கவிதைக்கு சொந்தக்காரர் பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், ஆராய்ச்சி நிபுணர், மென்பொருள் பொறியாளர் மற்றும் தொழில்முனைவர் உயர்திரு மதன் கார்க்கி அவர்கள் ஆற்றிய சிறப்புரை.
நன்றி...
பெருநிறுவனம் நிறுவிட நடத்திட
தலைமைப் பண்புகள் விதைக்கின்றோம்
ஆடுகளத்தில் நின்றிட வென்றிட
திடத்தையும் திறனையும் வளர்க்கின்றோம்
சர்வேதசக் கல்வி சாமானியர்க்கும் சாத்தியமே!
இதுவே இதுவே இதுவே - நம் கல்விப் பள்ளியின் சத்தியமே...
ஆம், இந்த நெறிமுறைகளை பின்பற்றி அனைவருக்கும் சர்வதேச கல்வி என்ற கொள்கையை உயிர் மூச்சாய் கொண்டுள்ள நமது பள்ளியின் தலைவர், முனைவர் உயர்திரு. செந்தில் குமார் ஐயா அவர்கள் ஆற்றிய சிறப்புரை.
நன்றி...
கனியிடை ஏறிய சுளையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும், நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரிள நீரும், இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் ! பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப அழகாக தனது வர்ணனைகள் மூலம் நிகழ்வினை தொகுத்து வழங்கிய மாணவர்கள்