கல்வி வளர்ச்சி நாள் !!!! எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை... வரலாறு ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்ந்ததில்லை!!! இவ்வரிகளுக்கே உரித்தான.... கர்மவீரர் காமராசர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக(15/07/24 திங்கட்கிழமை ) நம் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் திருவாரூர் அ.அபு Dr. A. ABU., M.Sc., M.Phil., PhD. (தன்னம்பிக்கை மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர், பட்டிமன்ற நடுவர், ஆன்மீகச் சொற்பொழிவாளர், பல்சுவை நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர்) அவர்களைத் தமிழ் பாரம்பரிய முறையில் வரவேற்று இனிதே துவங்கியது கல்வி வளர்ச்சி நாள் விழா.